Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்தப் போகும் 2 ,3ஆம் விருப்பு வாக்குகள்

ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்தப் போகும் 2 ,3ஆம் விருப்பு வாக்குகள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டிகள் இடம்பெறவுள்ளதால் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே உருவாகுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மகிந்த தரப்பினரால் வேட்பாளர் ஒருவரும் , ஐக்கிய தேசிய கட்சி தரப்பினரால் வேட்பாளர் ஒருவரும் மற்றும் ஜே.வி.பியினரால் ஒரு வேட்பாளரும் களமிறங்கவுள்ள நிலையில் இம்முறை போட்டி அதிகமாகவே இருக்குமென கூறப்படுகின்றது.
இதன்போது எவருக்கும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகலாம் என்பதுடன் இதன்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் முக்கியமானதாக இருக்குமென கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கு சீட்டில் ஒன்று , இரண்டு , மூன்று என குறிப்பிட்டு முறையே வேட்பாளர்களை தெரிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *