Search
Tuesday 26 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி : எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்கிறார் சஜித்

ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி : எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்கிறார் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர் தான் போட்டியிடுவது தொடர்பில் வேறு யோசனைக்கு இடமில்லை என்றும் கூறினார்.

” நாடு இன்று மிகவும் நெருக்கடியான நிலைமையை அடைந்துகொண்டிருக்கிறது. இன்னமும் சில மாதங்களில் நாம் ஜனதிபதி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம். இந்த தேர்தலே இங்தக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. பலரும் பல கருத்துக்களை கூறுகிறார்கள். எது எவ்வாறாக இருந்தாலும், சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் போட்டியிடுவார். இது பற்றி எந்த சந்தேகமும் இல்லை” என்று சஜித் பிரேமதாச கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *