Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கிறது

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கிறது

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டின் நீளம் அதிகரித்துள்ள நிலையில் அது வாக்களிப்பின் போது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் வாக்களிப்பதற்கான கால நேரத்தை முற்பகல் 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டுள்ளன.
இதற்கு இன்றைய தினம் வேட்பாளர்களுக்கும் , வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலேயே வாக்களிப்புகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *