Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

அடுத்த ஆட்சியை அமைக்கும் பொறிமுறையும் மந்திரமும் தங்களிடமே இருப்பதாகவும் இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெருபவர் யார் என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக நானும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே இருப்போம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015இல் நான் ஜனாதிபதி வேட்பாளராகிய போது மகிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தார். அதன்பின்னர் பாராளுமன்ற தேர்தலில் நான் நடுநிலையாக இருந்தேன். அப்போது இரண்டு கட்சிகளும் அறுதி பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை. நான் களமிறங்கிய போது மகிந்த ராஜபக்‌ஷ தோற்றார் என்றால் , நான் நடு நிலையாக இருந்த போது யாரும் வெற்றிப் பெறவில்லையென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவது நானும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இருக்கும் பக்கமே ஆகும். அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறிமுறையும் மந்திரமும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடமே இருக்கின்றது. நாங்களே யார் வெல்வது என்பதனை தீர்மானிப்போம். என கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *