Search
Thursday 22 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தல்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தல்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தினால் எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அந்த தேர்தலை நடத்த முடியுமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றும் உயர் நீதிமன்றத்தில் இன்னுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு எதிர்வரும் 27ஆம் திகதியே ஆராயப்படவுள்ளது. எவ்வாறாயினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 15ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்படுமாக இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆனபோதும் 15ஆம் திகதிக்கு பின்னர் என்றால் ஜனாதிபதி தேர்தலுக்கு அது இடையூறாகும் என்பதனால் அடுத்த வருடத்திலேயே மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமென மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *