செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)