Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவர தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவர தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்புகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இந்த விடயம் தொடர்பாக ஒரு பொது அறிக்கையை வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.அதன்படி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையைக் கொண்டுவர தயாரென நாடாளுமன்ற இறுதி அமர்வில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.அத்தோடு இந்த பிரேரணையில் 3/1 பங்கு அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 75 பேர் கையெழுத்திட வேண்டுமென கேட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 75 பேரிடம் தான் கையொப்பத்தை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *