Search
Friday 16 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் மனோ கணேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் மனோ கணேசன்

ஜனாதிபதிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.இதன்போது, தமது கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என தமது நிலைப்பாட்டை அறிவித்ததாக, சந்திப்பின் பின்னர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே கொழும்பு 7இல் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.இந்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *