Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன் நாளை பிரதமர் ஆஜராக மாட்டார்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன் நாளை பிரதமர் ஆஜராக மாட்டார்

அரசாங்கத்தில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாப ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளையதினம் ஆஜராக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமையால் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என பிரதமர் சார்பில் அந்த குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீள அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிக்கான கட்டடம் ஒன்றை இராஜகிரிய பகுதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பான சாட்சி விசாரணைக்காக பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *