செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக கரு – பிரதமர் வேட்பாளராக சஜித் – கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதன்படி அவரை வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
சஜித் பிரேமதாசவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு கருஜயசூரியவை வேட்பாளராக அறிவிக்கலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருஜயசூரிய வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் பிரதமர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படலாம் எனவும் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே தொடரும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
குறுகிய காலத்தில் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நோக்கத்திலேயே கருஜயசூரியவை வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)