Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு

ஐதேமு பங்காளி கட்சிகளின், சஜித் பிரேமதாச தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நேற்று நள்ளிரவுவரை நடந்தேறியது.
ஐதேமு சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிபட  ஒருபோதும் இபமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டன.
இன்று ததேகூ உடன் ஐதேக சஜித் தரப்பினர் நடத்தும் கலந்துரையாடல் முடிவுறும்வரை, நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய முடிவுகள் தொடர்பில் ஐதேமு பங்காளி கட்சிகள் சார்பில் தற்போது பகிரங்கமாக பேசுவதில்லை எனவும்  தீர்மானிக்கப்பட்டது. என மனோகணேசன்  தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் சம்பிக ரணவக (ஜாதிக ஹெல உருமய), மனோ கணேசன், பழனி திகாம்பரம் (தமுகூ), ரவுப் ஹக்கீம், நிசாம் காரியப்பர் (ஸ்ரீமுகா), ரிசாத் பதுதீன் (அஇமகா), சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசிம், எரான் விக்கிரமரத்ன (ஐதேக) ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *