தலைப்பு செய்திகள்

ஜுன் 20 தேர்தலை நடத்த முடியாது : தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

ஜுன் 20 தேர்தலை நடத்த முடியாது : தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது சட்டத்தரணியூடாக இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார துறையினரின் ஆரோக்கியமான பதில் கிடைக்குமாக இருந்தால் ஜுன்20ஆம் திகதிக்கு பின்னர் 9 முதல் 11 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த முடியுமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான 3ஆம் நாள் விசாரணையின் போதே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *