Search
Thursday 27 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஞானசாரவுக்கான தண்டனை அறிவிப்பு நாள் இன்று : நீதிமன்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு

ஞானசாரவுக்கான தண்டனை அறிவிப்பு நாள் இன்று : நீதிமன்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு

ஹோமாகம நீதிமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்பின் பிரகாரம் அவருக்கான தண்டனை இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த பகுதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிமன்ற வளாக பகுதியில் வைத்து பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்பு சில வாரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட போது அவருக்கான தண்டனையை இன்றைய தினம் அறிவிப்பதாக நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *