செய்திகள்

ஞானசார ஜனாதிபதி வேட்பாளராக?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி நுகேகொட நகரில் பொதுபல சேனாவினால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
பொது கூட்டணியின் பொது வேட்பாளராக இவர் அறிவிக்கப்படலாம் எனவும் இவருடன் இணைவதற்கு முக்கிய கட்சிகள் சில அவருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)