Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

டிரம்ப் மன்னிப்பு கேட்கவேண்டும்- ஆபிரிக்க நாடுகள் வேண்டுகோள்

டிரம்ப் மன்னிப்பு கேட்கவேண்டும்- ஆபிரிக்க  நாடுகள் வேண்டுகோள்

ஆபிரிக்கநாடுகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு கோரவேண்டும் என ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
சில நாட்களிற்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது டிரம்ப் ஆபிரிக்க நாடுகளை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
குடியேற்றவாசிகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே டிரம்ப் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து கடும் சர்ச்சைய உருவாக்கியுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் டிரம்பின் இந்த கருத்தை இனவெறி என வர்ணித்துள்ளார்.
டிரம்ப் அநாகரீகமான சொற்களை பயன்படுத்தினார் என்பதை வெள்ளை மாளிகை நிராகரிக்காத அதேவேளை ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் டிரம்ப் மன்னிப்பு கோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
அமெரிக்காவிற்கான ஆபிரிக்க ஒன்றிய தூதுக்குழுவினர் டிரம்பின் வார்த்தை பிரயோகம் குறித்து அதிர்ச்சியும் சீற்றமும் வெளியிட்டுள்ளதுடன் டிரம்ப் ஆபிரிக்க மக்களை பிழையாக புரிந்துகொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *