Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

டில்லியின் வளி மாசடைவு கொழும்புக்கும் பாதிப்பு

டில்லியின் வளி மாசடைவு கொழும்புக்கும் பாதிப்பு

இந்தியா புதுடில்லியின் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு இலங்கைக்கும் பாதிப்பாக அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகருக்கு மேலே, வளிமண்டலத்தில் உள்ள தூசு துகளிகளின் அளவு நூற்றுக்கு 100 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நாட்டில் காற்று 2 மடங்காக மாசடைந்திருப்பதாக தெரிவித்தார். கியுபிக் மீற்றருக்க 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள் இன்று பிற்பகல் அளவில் 70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *