Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு – யாழ். நகரில் தனியார் கல்வி நிலையங்களை மூட உத்தரவு

டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு – யாழ். நகரில் தனியார் கல்வி நிலையங்களை மூட உத்தரவு

யாழ்ப்பாணத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், தனியார் கல்வி நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.உடனடியாக அமுலுக்குவரும் வகையில், மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் சகல தனியார்க் கல்வி நிலையங்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார்க் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதால், இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரவலான கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்த பின்னர், தனியார் கல்வி நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *