Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தங்காலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா : பஸ் பயணங்கள் மேற்கொண்டதுடன் சலூன் ஒன்றுக்கும் சென்றுள்ளார்

தங்காலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா : பஸ் பயணங்கள் மேற்கொண்டதுடன் சலூன் ஒன்றுக்கும் சென்றுள்ளார்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் தங்காலை பட்டிப்பொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 5ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்து முகாமுக்கு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.
இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது மாத்தறை மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்துள்ளதுடன் பொது போக்குவரத்தையும் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5ஆம் திகதி கந்தக்காடு முகாமிலிருந்து விடுமுறையில் பஸ் மூலம் கொழும்புக்கு வந்துள்ள இவர் பின்னர் கொழும்பிலிருந்து அதிவேக வீதியூடாக பஸ் மூலம் மாத்தறைக்கு சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அங்கிருந்து கதிர்காமம் செல்லும் பஸ்ஸில் பட்டிப்பொலவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் விடுமுறையில் வீட்டில் இருந்த நாட்களில் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளதுடன் அங்குள்ள அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் இயந்திரத்தின் மூலம் பணமும் பெற்றுக்கொண்டுளள்ளார். அத்துடன் தங்காலையிலுள்ள சலூன் ஒன்றில் முடி வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 9ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் இவர் பயணித்த வாகனங்கள் , விடுமுறையில் வீட்டில் இருந்த காலப்பகுதியில் சந்தித்த நபர்கள் , சலூனில் முடி வெட்டிய பின்னர் அந்த சலூனில் முடிவெட்டியவர்கள் தொடர்பான தகவல்கள் சுகாதார அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *