Search
Saturday 22 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் 10,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் : விவாதத்திற்கு முன்னர் தெளிவு பெற எம்.பிக்களுக்கு காலமில்லை

தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் 10,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் : விவாதத்திற்கு முன்னர் தெளிவு பெற எம்.பிக்களுக்கு காலமில்லை

பிணை முறிகள் மோசடி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 18 , 19ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறாக விவாதிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான தெளிவில்லை என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஐந்து அறிக்கைகளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளதால், அதனை முழுமையாக ஆராயாது விவாதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, விவாதத்திற்கு முன்னர் இந்த அறிக்கை தொடர்பில் முழுமையான புரிதலை பெற்றுக்கொள்வது இலகுவான விடயமாக அமையாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
இதன் காரணமாக இந்த அறிக்கைகள் தொடர்பில் கோப் குழுவில் கலந்துரையாடி, சுருக்கமான அறிக்கை ஒன்றை தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *