Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தனது ஆட்சியில் பிரதமர் யார்? சஜித்தின் விளக்கம்

தனது ஆட்சியில் பிரதமர் யார்? சஜித்தின் விளக்கம்

தான் ஜனாதிபதியான பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் விசேட அறிவித்தலொன்றை விடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தமது அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.
இயலுமானவரை விரைவாக பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
தேசியப்பட்டியலில் தொழில் வல்லுநர்கள் மற்றும் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி புதிய முன்மாதிரியை உருவாக்குவதாகவும் பொதுத்தேர்தல் மற்றும் அதன் பின்னரான மாகாண சபைத் தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *