தலைப்பு செய்திகள்

தனது சர்வதேச கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: ஓக்லாந்து நிறுவன ஆய்வு அறிக்கை

தனது சர்வதேச கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: ஓக்லாந்து நிறுவன ஆய்வு அறிக்கை

இலங்கையின் நிலைமாறுகால நீதிக்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் சபை கலந்துரையாடலில் ஈடுபட்டுவரும் நிலையில் கலிபோர்னியாவின் ஓக்லாந்து நிறுவனம் இலங்கை தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள “மறுக்கப்பட்ட நீதி : இலங்கையில் மீள்குடியேற்றம், இராணுவநீக்கம் மற்றும் மீள்நல்லிணக்கம் ஆகியவற்றின் மெய்நிலை அறிதல்” என்ற ஆய்வு அறிக்கை நிலைமாறுகால நீதியை அடைவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறி இருக்கின்றமை மற்றும் காணி விடுவிப்பு மீள் குடியேற்றம் ஆகியவற்றின் தாமதம் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

” இலங்கை இராணுவம் பெருமளவு காணிகளை தொடர்ந்து ஆக்கிரமித்துவைத்துள்ளது, தரம் குறைந்த நிலங்களையே இராணுவம் விடுத்துள்ளது, தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொதுமக்களின் திறனை பாதிக்கச்செய்தல், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான உட்கட்டுமான மற்றும் வீட்டு தேவை மிகப்பெருமளவில் இருக்கின்றமை மற்றும் மீள்குடியேற்றற்றத்துக்கான கால அட்டவணையை அடிக்கடி மாற்றுவது போன்றவை அரசாங்கத்தில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2009 இல் யுத்தம் முடிவடைந்தபோதிலும் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்படைந்துள்ளது. இது வடக்கு கிழக்கில் இராணுவத்தை வெளியேற்றும் அரசாங்கத்தின் நோக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இன்னமும் 100,000 அதிகமான மக்கள் அகதிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தநிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது முகாம்களுக்காகவும் வர்த்தக மற்றும் உல்லாச முயற்சிகளுக்காக நிலங்களை ஆக்கிரமித்துவைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது ” என்று ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் தெரிவித்தார்.

” யுத்த குற்ற நீதிமன்றத்தில் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கும் தனது வாக்குறுதியில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அத்துடன் இராணுவம் மீது போர்குற்றச்சாட்டு மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இதேசமயம் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ள அனுராதா, சிறிசேன அரசாங்கத்தின் சிந்தனை அதனது சர்வதேச கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்வதாக இருக்கிறது என்றும் இலங்கை அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதற்கு பொறுப்பாக்குவது சர்வதேச சமூகத்தின் கடமை ” என்றும் குறிப்பிட்டுளார்.

ஓக்லாந்து நிறுவனத்தின் முழுமையான ஆய்வு அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது:  Justice Denied


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *