Search
Saturday 22 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும்

தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும்

ஞானசார தேரரின் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என விசக்கருத்தை விதைத்திருக்கிறார்.

நாட்டின் முக்கியமான தேர்தல் ஒன்று நெருங்கும் நேரத்தில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதிக்க அவர்களை போன்ற தீய சக்திகளுக்கு இடமளிக்க முடியாது.தமிழ் மக்களின் தேச வழமை சட்டம், முஸ்லீம்களின் விவாக விவாகரத்து சட்டம், சிங்களவர்களின் கண்டிய சட்டம் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் நாட்டின் இறையாண்மையை மதித்து சந்தோசமாக வாழும் மூவின மக்களையும் பிரித்து, நாட்டை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்காக ஞானசார தேரர் முன்னெடுக்கின்றாரா என சந்தேகம் எழுகின்றது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன என இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *