Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று மீண்டும் சந்தர்ப்பம்

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம், 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.இந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போனவர்கள் இன்றைய தினம் தமது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட செயலங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று வியாழக்கிழமை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *