Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் : இராஜங்கனையில் வாக்களிப்பு ஒத்தி வைப்பு

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் : இராஜங்கனையில் வாக்களிப்பு ஒத்தி வைப்பு

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் 17ஆம் திகதி வரையில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் நடைபெறவுள்ளது.
அரச அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்கள் இதில் வாக்களிக்கவுள்ளனர்.
எவ்வாறாயினும் அனுராதபுரம் ராஜங்கனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கு தபால் மூல வாக்களிப்புக்கான தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *