Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமக்கு பிடிக்கவில்லை என்பததற்காக பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது ஒரு நாட்டின் தலைவருக்குஅழகல்ல- பா.அரியநேந்திரன்

தமக்கு பிடிக்கவில்லை என்பததற்காக பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது ஒரு நாட்டின் தலைவருக்குஅழகல்ல- பா.அரியநேந்திரன்

விடுதலைப்புலிகள் மிகவும் ஒழுக்கமுடன் கூடிய கட்டமைப்பை வைத்திருந்தனர். அவ்வாறானவர்களின் வரலாறு தெரியாமல் ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக கூறுவது வெறும் பொய்யான புனை கதையே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் 70வீதமான நிலப்பரப்பை தமது ஆளுமையில் வைத்து நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தனர் எந்த ஒரு இடத்திலும் போதைப்பொருள் பாவனை நிலையங்களோ மதுபான சாலைகளோ இருந்ததில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி நிலப்பரப்பு போலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலம் வாகரை பகுதிகள் 2008ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாக இருந்தது. அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த இடத்திலும் எந்த ஒரு மதுபான சாலைகளோ சட்டவிரோத கசிப்பு காச்சும் இடங்களோ கஞ்சா சேனைகளோ இருக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் போராளிகள் எவரும் புகைத்தலை கூட தொட்டுப்பார்கவில்லை. வெற்றிலை பாக்கு ருசிப்பது கூட இல்லை அப்படியான நேர்த்தியான ஒழுக்கத்தை கடைப்பிடித்த வரலாறு அவர்களுக்கு மட்டுமே உண்டு.

வரலாறுகள் தெரியாமல் தமக்கு பிடிக்கவில்லை என்பதால் செய்யாத ஒரு செயலை அவர்கள் மீது கூறி பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்வது ஒரு நாட்டின் தலைவருக்குஅழகல்ல.

விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவிகள் புலம்பெயர் உறவுகளே கூடுதலாக வழங்கியதும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய பொருண்மிய அமைப்பை கட்டி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கால்நடைப் பண்ணைகள் விவசாயபண்ணைகள் வர்த்க நிலையங்கள் தொழிற்சாலைகள் என பலதரப்பட்ட கட்டமைப்புக்களால் அவர்களுக்கு வருமானம்கிடைத்தது .

அதைவிட கணிசமான நிதிகளை வடக்கு கிழக்கில் உள்ள பல தமிழ் மக்கள் வழங்கியதும் உண்டு அரச ஊழியர்களும் மாத வேதனத்தில் ஒரு பகுதியை வழங்கிய வரலாறு உண்டு. இது இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரச தலைவருக்கும் ஏன் இலங்கை புலனாய்வு பிரிவுக்கும் நன்கு தெரிந்த விடயம்தான் அப்படி இருக்கும் போது தற்போது திடீரென ஜனாதிபதி போதை பொருள் கதையை கூறி இருப்பது ஏற்க முடியாது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொழும்பு மட்டக்களப்பு போன்ற இடங்களில் நடத்திய மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் பல சிங்கள அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் விடுதலைப்புலிகளின் போராட்டம் நடத்தை சம்மந்தமாக மிகவும் புகழாரம் சூட்டி நாடாளுமன்றத்திலும் பொது இடங்களிலும் பேசியது எல்லோருக்கும் தெரியும்

எவருமே விடுதலைப்புலிகளை இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசவில்லை அவர்களின் போராட்டம் இலட்சியம் இலக்கு கொள்கை எல்லாம் வேறு விதமாகவே இருந்தது என்றே கருத்துரைத்தனர் அதுதான் உண்மையும் கூட.ஜனாதிபதி இதனை ஏற்றுக் கொண்டவராகவே இருந்தவர் ஆனால் போதை பொருள் பாவனை கதையை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாக கூறி இருப்பது உண்மைக்கு புறம்பான கருத்தாகும் என மைத்திரியை கடுமையாக சாடியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *