Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் அறிவிப்பு

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால்  கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் அறிவிப்பு

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத் தலைவரும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் அறிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று மற்றைய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சம்பவத்திற்கு தீர்வு காணுமாறு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை ஐங்கரன் அணுகியிருக்கின்றார்.

இந்நிலையில் ஏனைய உறுப்பினர்களை அழைத்த மாவை சேனாதிராஜா சமரசத்துக்கு உடன்படுமாறும், வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றபட்ட பின்னர் அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருக்கின்றனர்.இருந்தபோதிலும், அவரை நீக்கினாலேயே வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.இந்நிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று மாவை சேனாதிராஜா தன்னிடம் தெரிவித்ததால் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் தான் அந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *