Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் முக்கிமான அமைச்சரவை இன்று மாலை: 7 தமிழர்களின் விடுதலை அறிவிப்பு வெளியாகலாம்

தமிழக அரசின் முக்கிமான அமைச்சரவை இன்று மாலை: 7 தமிழர்களின் விடுதலை அறிவிப்பு வெளியாகலாம்

பரபரப்பான சூழலில் இன்று மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இரு முக்கிய சம்பவங்கள் குறித்து முடிவு எடுக்கும் நிலையில் மாநில அமைச்சரவை உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அடுத்தபடியாக குட்கா வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எனினும் நீதிமன்றம் அவர்களை குற்றவாளி என்று இன்னும் அறிவிக்கவில்லையே என தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதில் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 7 தமிழர்கள் விடுதலையை முடிவு எடுக்கும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *