Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மண்டபம் முன் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டம்

தமிழரசு கட்சியின்  தேசிய மாநாடு மண்டபம் முன்  காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டம்

தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் யாழில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. என வலியுறுத்தி இந்த கவனயீா்ப்பு போராட்டம் உறவினா்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், மாநாட்டு மண்டபத்திற்குள் நுழையாத வண்ணம் நுழைவாயில்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், விசேட அதிரடிப்படையினரும் அங்கு காணப்படுகின்றனர்.மேலும் இதன்போது தமிழரசுக்கட்சியைச்சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.(15)1 2 3 1122


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *