Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்

தமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்

இந்தத் தீவில் தமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்லராசா காஜேந்திரகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தீவில் உங்களின் சகோதர தேசத்தின் உரிமைகளை முற்றாக மறுத்துக்கொண்டு உங்களுடைய ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த முடியுமென்று எண்ண முடியாது.

இந்த தீவில் தமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிடவும் முடியாது.

வடக்கில் கிழக்கில் எங்களின் உயிரிழந்த உறவுகளை நினைவு கூற முடியாது என்று நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அதேபோன்று வவுனியா நெடுங்கேணியில் வெடுக்குநாறி ஆலயத்தில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதற்கு காவல் துறையினர் அதனை குழப்பிக்கொண்டுள்ளனர்.

எங்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூறுவதற்காக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். என்று அவர் கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *