Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழர் என்று ஏமாற்றி ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட இஸ்லாமிய நபர்

தமிழர் என்று ஏமாற்றி ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட இஸ்லாமிய நபர்

திருகோணமலை மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார்.

இந்நிலையில் இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர். குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்ற போதே கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவல் முகப்­புத்­தக நூலில் வெளி­வந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்­து­ரைத்து தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த முக­நூலை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­துள்ளார். அது­மட்­டு­மன்றி தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை மூதூர் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் சிவா, என்று அழைக்­கப்­படும் குறித்த நபரின் உண்­மை­யான பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் என்றும் இவர் ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ரென்றும் ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும் தெரிய வரு­கி­றது. மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும் இரண்­டா­வது மனைவி மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும் மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது

இந்நிலையில் இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.இவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை அழைத்து விசா­ர­ணை­களை செய்­துள்­ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *