Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என மேன்முறையீட்டு ஆணைக்குழு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என மேன்முறையீட்டு ஆணைக்குழு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.அதன் பிரகாரம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதிருந்த தடை தவறானது என தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) அறிவித்துள்ளது.நீதிமன்றின் தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கதின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *