Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழுக்கு தடைவிதித்த உணவகம் மீது நடவடிக்கை- மனோ கணேசன் அதிரடி

தமிழுக்கு தடைவிதித்த உணவகம் மீது நடவடிக்கை- மனோ கணேசன் அதிரடி

கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பெப்பமின்ற் கபே என்ற பிரபல உணவகத்தில் ஊழியர்கள் தமிழ் மொழியில் உரையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தமிழ் மொழியில் பேசக்கூடாது என தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்ட கொழும்பு உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *