Search
Friday 23 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை

இந்திய நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க உள்ளது. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்விக்கும் விடையளிக்க இருக்கிறது. ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, திமுக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. 22 இடங்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மிக எளிதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *