Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம் பிரதிநிதிகள் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி

தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம் பிரதிநிதிகள் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம் சேர்ந்த பிரதிநிதிகள் இன்றைய தினம் காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்றைய தினம் வடக்கிற்கு வருகை தந்திருந்த அவர்கள், மன்னர் மாவட்டத்தில் சதொச வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழிக்கு நேரில் சேர்ந்து பார்வையிட்டிருந்தனர்.

இதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று அங்கு வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பல அமைப்புக்களுடன் அவர்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். இந்த குழுவில் தமிழ் நாட்டை சேர்ந்த மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.1

இக்குழுவில் தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *