Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரனை நியமிக்க திட்டம்?

தமிழ் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரனை நியமிக்க திட்டம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே இவ்வாறாக ஆராயப்பட்டு வருவதாகவும் இதன்படி சுமந்திரனை தலைவராக நியமித்து சம்பந்தனை போசகரான நியமிப்பதற்கு கட்சிக்குள் ஆராயப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
கட்சியின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இதுவரை எந்த அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *