Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் அரசாங்கம் இனி எந்த பேச்சுக்களையும் நடத்தாது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் தற்போது வடக்கு , கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த தமிழ் பிரதிநிதிகள் இருப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டு தீர்வுகளை வழங்க நடவடிக்கையெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இத்தனை காலம் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டிருந்தாலும் இம்முறை மக்களை அவர்கள் நிராகரித்துள்ளதாகவும் இவ்வாறான கட்டத்தில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை தமக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகையொன்றுக்கே தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *