Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.தியாக தீபம் தீலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நல்லூர் திடலிலேயே, குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.22-3

குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், அரசியல் குழு உறுப்பினர் பொன்.மாஸ்டர், யாழ். மாநகரசபை உறுப்பினர் ரஜீவ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் மாவீரர்களுக்கு கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்தும் வாரமாக உள்ளது. அந்த வகையில் ஆரம்ப நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *