Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா

வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆட்சியாளர்களுடன் கதைப்பதில் எனக்கு சில சங்கடங்கள் உள்ளன. ஏனென்றால் நான் வெற்றி பெறவில்லை. நான் எதிர்பார்த்தது போல் தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதை சொல்வதற்கு நான் தயங்கவில்லை.எனவே வர இருக்கும் சந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வாக்குகளை விட எனக்கு கிடைத்த வாழ்த்துக்கள் பல மடங்கு அதிகமாகவுள்ளது என தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெற்றே அமைச்சு பதவியை எடுக்கும் நோக்கம் இருந்தது. எனினும் பலரின் கோரிக்கைக்கு அமைய தற்போது அமைச்சு பதவியை பெற்றிருக்கின்றேன்.இது நாடு தழுவியதான அமைச்சாகவுள்ளது. என்னை சமுத்திரத்தில் தள்ளிவிட்டுள்ளது. எனினும் நான் சமுத்திரத்தில் நீந்துவது என்று முடிவெடுத்து இருந்தாலும் இரு பக்கமும் இரு கருங்கற்கல் கட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்று தேசிய அமைச்சு என்ற கருங்கல் மறுபக்கம் தமிழர்களின் பிரச்சனைகள் என்ற கருங்கல். ஆகவே இந்த கருங்கற்களை கட்டிக்கொண்டே நான் இந்த சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன்.செல்வநாயகம், தன்னால் முடியாத போது கூறியிருந்தார் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் கடவுள்தான் வரவேண்டும் என்றார். நானும் எனது இறுதிக்காலட்டத்தில் கூற விரும்புவது இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும்.

இதேவேளை கடந்த 71ஆம் ஆண்டும் 89ஆம் ஆண்டும் சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும்போது பாதிக்கப்பட்டது அப்பாவி சிங்கள மக்கள்.இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் புலித்தலைமைகள் வன்முறையை தொடர்ந்தமையால் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மக்கள்.சமீபத்தில் முஸ்லீம் மக்களின் பெயரால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டது அப்பாவி முஸ்லீம் மக்கள்.ஆகவே அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை தலைதூக்கும் போது இது நடப்பது தவிர்க்க முடியாதது. இது உலக வரலாறு. இதற்கு உலகில் எந்த நாடும் விதிவிலக்காக இருந்ததில்லை என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *