Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக்கூடிய ஆளுமை உள்ளவர்களை அடையாளங்கண்டு வாக்களியுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக்கூடிய ஆளுமை உள்ளவர்களை  அடையாளங்கண்டு வாக்களியுங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள்

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் பெருமளவில் உருத்திரண்டுள்ளன. இலங்கை ஒரு பௌத்த, சிங்கள தேசம் என்பதை உறுதிப்படுத்துவதில் அவை முனைந்து நிற்பது வெள்ளிடை மலையாக உள்ளது.வடக்கிலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சமய, சாதீய முரண்பாடுகளையும் போரின் பின்னான வறுமை நிலையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் களத்தில் காலூன்றிவிட வேண்டும் என்ற பெருவிருப்போடு தென்னிலங்கைக் கட்சிகளும் வட,கிழக்கிலுள்ள அவர்களின் முகவர்களும் களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள். கட்சி, எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக்கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

30 ஆண்டு கால போராட்டத்தில் நாம் இழந்தவை பெரிது. அவற்றின் கைமாறு இன்றில்லாவிட்டாலும் என்றாவது கிட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.தேர்தலுக்கு முன்பு எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்டமுடியுமென்று நாம் நம்புகின்றோம்.தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் ஒப்பத்துடன் வெளிவந்துள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)Jaffna-University-Student-Union-Report-Parliament-Election-2020-1-1471x2048


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *