Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றம் சவேந்திர சில்வாவின் தடை குறித்து கூட்டமைப்பு

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றம் சவேந்திர சில்வாவின் தடை  குறித்து கூட்டமைப்பு

இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது .அத்துடன் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான அமெரிக்க தடையை நாம் காண்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *