Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்: 5 தமிழ் கட்சிகளும் இடைக்கால முடிவு

தமிழ் மக்கள் விரும்பிய  வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்: 5 தமிழ்  கட்சிகளும் இடைக்கால முடிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலவாக்கெடுப்பில் தமிழ் மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று 5 தமிழ் கட்சிகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களின் அனுசரணையில் தயாரித்த 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கைச்சாத்திட்ட 5 கட்சிகளும் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது இந்த முடிவை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்னமும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை என்பதால், இறுதி முடிவு எதையும் எடுப்பதில்லை என்றும் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் 5 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இந்த சந்திப்பில் தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அருந்தவபாலன், சிற்பரன் , புளொட் சார்பில் சித்தார்த்தன், கஜதீபன், சதானந்தன், டெலோ சார்பில் ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன் மற்றும் EPRLF சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவசத்தி அனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


One thought on “தமிழ் மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்: 5 தமிழ் கட்சிகளும் இடைக்கால முடிவு

  1. Kala

    இத சொல்லுறதுக்கு நீங்கள் ஏனடா?தைரியமாக முடிவெடுக்க முதுகெலும்பு இல்லாத உங்களுக்கு என்னத்துக்கு கூட்டம்?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *