Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் -மஹிந்த

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் -மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல. சிறுபான்மை இன மக்களும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கோத்தாபாய ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *