Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையானார்!

தயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையானார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆஜராகினார்.
ஆரம்பத்தில் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லையென கூறினாலும் சபாநாயகரின் உத்தரவுக்கமைய அவர் இன்றைய தினம் குழுவில் முன்னிலையாகினார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் தெரிவுக்குழு கூடியது.
இதன் போது தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்று குண்டு வெடிக்காதது தொடர்பில் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக குழு முன்னிலையில் விளக்கமளித்தார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் நிகழ்ச்சியில், தயாசிறி ஜயசேகர தனது கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பாக இன்றைய தினம் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது.
பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் அவர்களும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்று குண்டு வெடிக்காதது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவை சரியான முடிவுகளையும் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *