Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாடு முழுவதிலும் எதிர்வரும் தினங்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளது.
இதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்க்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக் கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்கள் முதல் தொடர்ச்சியாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது வழமையாகும். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் உள்ள மாவட்டங்களில் அனர்த்தத்தை எதிர்க்கொள்வதற்காக தேவையான உபகரணங்கள் மாவட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இடர் அனரத்த சந்தர்ப்பத்தின் போது உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக முப்படை மற்றும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் ஆகியவற்றினால் விடுக்கப்படும் தொழில் நுட்ப அறிவித்தல்களை ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கும் மத்திய நிலையம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *