Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தற்கொலை தாக்குதலில் பலியான தனது 3 பிள்ளைகளையும் கண்ணீர்மல்க ஒன்றாக புதைத்த டென்மார்க் கோடீஸ்வரர்

தற்கொலை தாக்குதலில் பலியான தனது 3 பிள்ளைகளையும் கண்ணீர்மல்க ஒன்றாக புதைத்த டென்மார்க் கோடீஸ்வரர்

சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த டென்மார்க் நாட்டின் முதல் நிலை கோடீஸ்வரரான ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன்-வயது 46 (போர்ப்ஸ் பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் இவர்) அவரின் இரு மகள்மாரினதும், ஒரு மகனினதும் இறுதி ஆராதனை நிகழ்வும், நல்லடக்கமும் டென்மார்கில் அர்ஹஸ் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இறுதி ஆராதனை நிகழ்வில் டென்மார்க்கின் அரசகுடும்ப உறுப்பினர்கள், மற்றும் அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பல நூறு மக்கள் கலந்துகொண்டனர்.

தனது மூன்று பிள்ளைகளினதும் உடல்கள் வெள்ளை நிற பிரேத பெட்டியில் மலர்கள் மற்றும் பலூன்களுடன் தேவாலயத்துக்குள் கொண்டுவரப்பட்டபோது ஆன்ட்ரஸன் தனது மனைவி ஆன் மற்றும் எஞ்சியுள்ள ஒரே மகள் அஸ்ரிட் ஆகியோரை அரவணைத்தபடி கண்ணீர் மல்க நின்றிருந்தார்.

2 3 4 5 6 7 8 9 10 11 12


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *