Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தற்போது அரசியல் தலைமை தாங்குபவர்கள் ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும்-கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

தற்போது அரசியல் தலைமை தாங்குபவர்கள் ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும்-கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு அங்கமாக நேற்று திங்கட்கிழமை ரோமில், பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்தார்.பின்னர் மிலானோ நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனைகளில் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது தற்போது அரசியல் தலைமை தாங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கர்தினால், “எமது அரசியல் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்தது என்ன? பலருக்கும் அதிகாரத்திற்கு வர பேராசை உள்ளது. எனவே அவர்கள் அடுத்தவர்கள் மீது பழியைச் சுமத்திக்கொண்டுள்ளார்கள்.அவர்கள் சில அதிகாரிகளை பிடித்து வைத்துக்கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறும் முனைப்பில் வேலையாற்றுவதில்லை.

ஈஸ்டர் தாக்குதல்களில் அரசியல் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும். நாங்கள் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில், சுயநலமற்ற பேராசையற்ற, பொறுப்பற்ற தலைவர்கள் மேல் எழ வேண்டும்.சுதந்திரத்திற்கு பின்னரான 71 வருடங்களில் இலங்கை ஏற்கனவே சுந்திரத்தை இழந்துள்ளது. இதைத்தான் கடந்த ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தந்தார்கள். எனவே, பழையவர்கள் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்.

மேலும் நாட்டை ஆட்சி செய்த பல தலைவர்கள் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்டார்.அத்துடன், தற்போது அரசியல் தலைமை தாங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *