Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் நாட்டில் கடந்த கால நிலமையை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் நாட்டில் கடந்த கால நிலமையை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்

அரசினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள் நாடு முன்னர் காணப்பட்ட நிலை மற்றும் தற்போதுள்ள நிலைக் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான மாற்றங்களை எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் தொடர்ந்தும் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று வரக்காபொல ஆதார வைத்தியசாலையின் நவீன கருவிகளுடன் கூடிய புதிய ஆறு மாடி மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நாட்டின் சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் மிக தெளிவானது என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பொன்று தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் சுகாதார துறையில் நிறைவேற்றப்பட முடியாது காணப்பட்ட பல விடயங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பல்தேசிய நிறுவனங்களின் பின்னால் செல்வதற்கு அரசு ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் மக்கள் நாட்டிற்காக தமக்கு வழங்கிய பொறுப்புக்களை சரியான முறையில் மேற்கொள்வதாக தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *