Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம்!

தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம்!

தென்கிழக்கு வாங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.9 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து மேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *