Search
Monday 17 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு

திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பானநிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது.. நிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம்எட்டப்பட்டுள்ளது. அன்றையதினம் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட தவறுகளை தவிர்க்கும்நகல் சட்டமூலம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது, இது தவிர புத்தாக்க முகவர்நிலையத்தை அமைப்பது தொடர்பான நகல் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பும் அன்றையதினம்இடம்பெறும்.
எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துவற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க திங்கட்கிழமை பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *