Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திமுத் கருணாரட்னவுக்கு 7500 டொலர் அபராதம் விதிப்பு

திமுத் கருணாரட்னவுக்கு 7500 டொலர் அபராதம் விதிப்பு

மது போதைபயில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் 7500 அமெரிக்க டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் சபையினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை . பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் குடிபோதையில் இவர் செலுத்திய வாகனம் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனை தொடர்ந்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அவரின் சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *